கணவா் ஒரு வாரம் குளிக்கவில்லை... விவாகரத்து கேட்ட மனைவி !

கணவர் ஒரு வார காலமாக குளிக்காமல் இருந்ததால் மனைவி விவகாரத்து கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
 | 

கணவா் ஒரு வாரம் குளிக்கவில்லை... விவாகரத்து கேட்ட மனைவி !

கணவர் ஒரு வார காலமாக குளிக்காமல் இருந்ததால் மனைவி விவகாரத்து கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதனிடையே கணவர் அடிக்கடி 1 வார காலத்திற்கும் மேலாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும், ஒரு வாரத்திற்கும் மேலாக அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் விவாகரத்து கோரி மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஒரு 6 மாத காலத்திற்கு கணவன்- மனைவியை பிரிந்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், அதன்பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளது. 

இதனிடையே அண்மையில் சின்னச் சின்ன காரணங்களுக்காக கூட தம்பதியினர் புரிதல் இல்லாமல் விவாகரத்து கேட்பதாக நீதிமன்ற ஆலோசகர் தெரிவித்துள்ளார். தம்பதியினருக்கு இரண்டு வீட்டார் சம்மதத்துடனேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது.  தற்போது அப்பெண்ணின் வீட்டார், கணவரை விட்டு பிரியாதே என எவ்வளவோ எடுத்துக்கூறியும் அப்பெண் அதனை கேட்காமல் விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறியது தெரியவந்துள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP