பணம் தர மறுத்த பள்ளித் தாளாளருக்கு அடி, உதை!

தாங்கள் கேட்ட பணத்தை தர மறுத்த தனியார் பள்ளித் தாளாளரான பெண்ணை, ரெளடி கும்பல் தாக்கியுள்ள சம்பவம் பிகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேர் கொண்ட ரௌடி கும்பல் அப்பெண்ணிடம் 1.5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளது.
 | 

பணம் தர மறுத்த பள்ளித் தாளாளருக்கு அடி, உதை!

தாங்கள் கேட்ட பணத்தை தர மறுத்த தனியார் பள்ளித் தாளாளரான பெண்ணை, ரெளடி கும்பல் தாக்கியுள்ள சம்பவம் பிகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், சஹர்சா பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியின் தாளாளரான பெண்ணிடம்,  நான்கு பேர் கொண்ட ரௌடி கும்பல் 1.5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளது. 

அவர் பணம்  தர மறுக்கே ஆத்திரமடைந்த அந்த கும்பல், பள்ளி வளாகத்தில் வைத்தே அவரை உருட்டுக்கட்டை மற்றும் பெல்ட்டால் சரமாரியாக தாக்கியுள்ளது. அந்தப் பெண் தம்மை விட்டுவிடும்படி கதறியும், ரௌடி கும்பல் இரக்கமில்லாமல் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளது.

மேலும், பள்ளிக் கட்டடத்தின் மீது அந்த கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதுடன், கற்களை வீசியும்  வகுப்பறைகளின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். பட்டப்பகலில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் பிகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இத்தாக்குதல் காட்சிகளைக் கொண்டு, இச்சம்பவம் குறித்து போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP