ஹிமாச்சல்: பாரா கிளைடர் விபத்தில் இளைஞர் பலி

ஹிமாச்சல பிரதேசத்தில் பாரா கிளைடர் விபத்தில் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபர் உயிரிழந்தார்.
 | 

ஹிமாச்சல்: பாரா கிளைடர் விபத்தில் இளைஞர் பலி

ஹிமாச்சல பிரதேசத்தில் பாரா கிளைடர் விபத்தில் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபர் உயிரிழந்தார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலியில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதுண்டு. இந்நிலையில், அங்கு சுற்றுலாவுக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அமன்தீப் சிங் என்பவர் வந்திருந்தார்.

அவர் அங்கு பாராகிளைடரில் பயணம் செய்தார். அப்போது திடீரென பாரா கிளைடரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த பாராகிளைடர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பாரா கிளைடரில் பயணம் செய்த அமன்தீப் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP