இமாச்சலப்பிரேதசம்- பனிச்சரிவில் சிக்கியுள்ள 5 வீரர்களை தேடும் பணி தொடர்கிறது

இமாச்சலப்பிரதேசத்தில் பனிச்சரிவில் புதையுண்டு கிடக்கும் 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
 | 

இமாச்சலப்பிரேதசம்- பனிச்சரிவில் சிக்கியுள்ள 5 வீரர்களை தேடும் பணி தொடர்கிறது

இமாச்சலப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட  திடீர் பனிச்சரிவில் புதையுண்டு கிடக்கும் 5 ராணுவ வீரர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இந்திய ராணுவ வீரர்களும், இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் என மொத்தம் 16 பேர் இமாச்சலப்பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள பனிமலையில் வழக்கமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில்,  வீரர்களில் 6 பேர் பனிக்குள் புதையுண்டனர்.

இமாச்சலைச் சேர்ந்த41 வயதான வீரர் ஒருவர் இதுவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 5 வீரர்கள் பனிச்சரிவுக்குள் புதையுண்டுள்ளனர். நேற்றிரவு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், மீட்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று காலை முதல், மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளன.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP