ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், சாலைகளை ஆக்கிரமித்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 | 

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், சாலைகளை ஆக்கிரமித்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குளிர்காலம் தொடங்கியதில் இருந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. ரஜோரி பகுதியில் மலைகள், சாலைகள், வீடுகளின் கூரைகள் அனைத்தையும் பனி ஆக்கிரமித்து, வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காணப்படுகிறது.

இதனால் சாலைகளில் 2 அடி அளவு பனிக்கட்டிகள் படர்ந்துள்ளது. இதனால் சாலை  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து நிற்கின்றன. 

இதையடுத்து சாலைகளில் குவிந்திருக்கும் பனிக்கட்டிகளை பல்வேறு விதமான வாகனங்கள் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP