ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர் பனிப் பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Wed, 27 Feb 2019
| ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொடர் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிம்லா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் பனி படர்ந்து கிடக்கின்றனன. சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது போர்வை போல பனி படர்ந்துள்ளது.
இதனிடையே சிம்லா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
newstm.in
newstm.in