மும்பையில் கனமழை- பள்ளி மாணவர்கள் அவதி

மும்பையில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. சாலை மற்றும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 | 

மும்பையில் கனமழை- பள்ளி மாணவர்கள் அவதி

மும்பையில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. சாலை மற்றும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக விடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே ஏராளமான இடங்களில் முழங்கால் அளவை தாண்டி, மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மும்பை நகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் பள்ளி மாணவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் தடுமாறி பள்ளிக்கு சென்றனர். பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் மேலும் சில நாட்கள் கன மழை தொடரும் என மண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP