மும்பையில் வரலாறு காணாத கனமழை!

மும்பையில் கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மும்பைக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது.
 | 

மும்பையில் வரலாறு காணாத கனமழை!

மும்பையில் கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மும்பைக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது. 

சாண்டாக்ரூஸ் ஆய்வு மையத்தின் தகவல் படி, கடந்த ஜூன் 1 முதல் செப் 18 வரை மும்பையில் 3,475.2 மிமி மழை பெய்துள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் 18 நாட்களிலேயே 921.3 மிமி மழை பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வங்காள விரிகுடா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் கடலோர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படலாம் எனவும், அதனால்  மஹாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மும்பைக்கு இன்று ரெட்அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்துள்ளது. 

மும்பையில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை தொடரும் நிலையில் இந்த ஆண்டு 3,475.2 மிமி மழை பெய்துள்ளதாகவும், 1958 - ல் 3759.7 மிமி மழை பதிவாகியுள்ளதை தொடர்ந்து, இந்த முறையே அதிக மழை பதிவாகியுள்ளது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சாண்டாக்ரூஸ் ஆய்வு மையம் 7.6மிமி மழையும், கொலாபா ஆய்வு மையம் 28.8மிமி மழையும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிற பகுதிகளான, பன்வல் 114.6 மிமி, வாசை 21 மிமி, தஹானு 38.3 மிமி, விரார் 22 மிமி, பல்கார்  34 மிமி மழையும் பதிவு செய்துள்ளது.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP