ஹரியானா- மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

ஹரியானா மாநிலத்தில் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
 | 

ஹரியானா- மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து

ஹரியானா மாநிலத்தில் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் மெத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனத்தின் தொழிற்சாலையும் கிடங்கும் உள்ளது.

இன்று பிற்பகல் அந்த தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயைணப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு  வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயன பேரல்கள் வெடித்து சிதறுவதால் அப்பகுதியில் புகை மற்றும் நெடியால் அப்பகுதி மக்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP