மனம்திருந்திய பெண் நக்ஸலைட்டுகள் சரண்!

ஒடிஸா மாநிலத்தில், இரு பெண் நக்ஸலைட்டுகள் தங்களது தீவிரவாத போக்கை கைவிட்டு, மனம்திருந்தி போலீசில் சரணடைந்தனர்.சர்வதேச மகளிர் தினத்தில் அவர்கள் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை, மாநில டிஜிபி வெகுவாக பாராட்டினார்.
 | 

மனம்திருந்திய பெண் நக்ஸலைட்டுகள் சரண்!

ஒடிஸா மாநிலத்தில், பெண் நக்ஸலைட்டுகள் இருவர் தங்களது தீவிரவாத போக்கை கைவிட்டு, மனம்திருந்தி போலீசில் சரணடைந்தனர்.

நக்ஸல் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள மாநிலங்களில் ஒடிஸாவும் ஒன்று. தீவிரவாதத்தை கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விரும்பும் நக்ஸலைட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இத்திட்டங்களை கருத்தில்கொண்டு,  நக்ஸல்கள் உள்ளிட்டோர்  தங்களது தீவிரவாத போக்கை கைவிட்டு, அவ்வப்போது போலீசில் சரணடைந்து வருகின்றனர்.

அவர்களின் வரிசையில், ஒடிஸா மாநிலத்தில் மேலும் இரண்டு பெண் நக்ஸலைட்டுகள் இன்று போலீசில் சரணடைந்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தில் அவர்கள் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை, மாநில டிஜிபி ராஜேந்திர பிரசாத் சர்மா வெகுவாக பாராட்டினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP