குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா- பிரதமர் மோடி அஞ்சலி

குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
 | 

குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா- பிரதமர் மோடி அஞ்சலி

குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

குரு ரவிதாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில் 1433 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா, குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற மிக எளிமையான பெண்.

ரவிதாஸ் காலத்தின் சமூகத்தில் நடைமுறையில் இருந்துவந்த சாதி அமைப்பின் காரணமாகவும், தீண்டாமை வழக்கங்களாலும் மக்கள் பெரிதும் வேதனைகளை அனுபவித்து வந்தனர். சமூக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, சாதி அடிப்படையிலான கடும் கட்டுப்பாடுகளால் அவர்கள் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

இந்த சூழலில், செருப்பு தைக்கும் குலத்தைச் சேர்ந்த குரு ரவிதாஸ், பெரும் சவாலாக எழுந்து, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். 

குரு ரவிதாஸ் இந்த நாட்டின் சமூக சமத்துவமின்மையை எதிர்ப்பதோடு நில்லாமல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காகப் பரப்புரையை மேற்கொண்டார். குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருடைய நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP