குஜராத்- ஆற்றில் குளித்த சிறுவன் உள்பட 3 பெண்கள் மூழ்கி சாவு!

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த ஒரு சிறுவன் உள்பட 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
 | 

குஜராத்- ஆற்றில் குளித்த சிறுவன் உள்பட 3 பெண்கள் மூழ்கி சாவு!

குஜராத் மாநிலத்தில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த ஒரு சிறுவன் உள்பட 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள பிரதபுரா கிராமத்தை சேர்ந்த சிலர் ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தனர். இன்று காலை 12 வயது சிறுவன் உள்பட 4 பெண்கள் மஹிசாகர் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

அப்போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் மணல் கடத்தல்காரர்களால் ஆற்றில் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் சிக்கி கொண்டான். அவனை காப்பாற்றுவதற்காக 4 பெண்களும் குழிக்குள் சிக்கிய சிறுவனை மீட்க முயன்றனர்.

ஆனால் ஒருவர் ஒருவராக மூன்று பேர் குழிக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் கூச்சலிடுவதை கேட்ட அருகில் இருந்தவர்கள் குழியில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் ஒரு பெண்ணை மட்டும் உயிருடன் காப்பாற்றினர். சிறுவன் உள்பட மற்ற மூன்று பெண்களும் சடலமாக மீட்கப்பட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP