Logo

குஜராத்- வீரர்கள், போர் விமானம், பீரங்கிகளை அச்சிட்டு சேலைகள்

புல்வாமா தாக்குதலை அடுத்து, ராணுவ வீரர்கள், தேஜாஸ் போர் விமானம், பீரங்கிகளை அச்சிட்டு குஜராத்தில் சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
 | 

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

குஜராத்தின் சூரத் பகுதியில், அன்னபூர்ணா இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் ஜவுளி ஆலை உள்ளது. அங்கு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசிய ஆலையின் இயக்குநர் மனிஷ், ''இந்தப் புடவைகளில் ராணுவத் துறையின் வலிமையைச் சித்தரித்துள்ளோம். புடவைகளில் ஜவான்களின் வலிமை, நவீன ரக பீரங்கிகள், தேஜாஸ் மாதிரியான போர் விமானங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் புடவைகளுக்கான ஆர்டர்கள் குவிந்துவருகின்றன. இதில் கிடைக்கும் மொத்த லாபத்தையும் வீர மரணமடைந்த குடும்பங்களுக்கு அளிக்க முடிவுசெய்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP