மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் பயங்கர தீவிபத்து

மும்பை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் பயங்கர தீவிபத்து. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர்.
 | 

மும்பை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மும்பை குர்லா பகுதியில் உள்ள நேரு நகர் பகுதியில் 2 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று மதியம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தடைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடன‌டியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP