அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அந்த வளாகத்தில் இருந்த கடைகள் மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாகின. இதில் யாரும் இறந்ததாக இதுவரை தெரிய வரவில்லை
 | 

அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள  5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அந்த வளாகத்தில் இருந்த கடைகள் மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாகின.

கரியாஹேட் பகுதியில் பிரபல 5  மாடி கட்டடம் ஒன்றுள்ளது. இதன் தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் துணிக்கடை உள்ளிட்டவையும், இரண்டாம் தளத்திலிருந்து ஐந்தாவது தளம் வரை குடியிருப்புகளும் உள்ளன.

இந்நிலையில், இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், வணிக வளாகத்தில் உள்ள கடைகள் மற்றும் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

தீ விபத்தை அடுத்து, குடியிருப்புக்குள் இருந்த அனைவரும்  பத்திரமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் எனவும், இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ தற்போது முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும், யாரும் இறந்ததாக இதுவரை தெரிய வரவில்லை என்றும் அவர்கள் மேலும் கூறினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP