அரசு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

டெல்லியில் அரசு கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி சிஜிஓ வளாகத்தில் அமைந்துள்ள பண்டிட் தீனதயாள் அந்தியோதயா பவனில், சிபிஐ அலுவலகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
 | 

அரசு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!


டெல்லியில் அரசுத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

டெல்லி சிஜிஓ வளாகத்தில் அமைந்துள்ள பண்டிட் தீனதயாள் அந்தியோதயா பவனில், சிபிஐ அலுவலகம் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்தக் கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள சமூக நீதித் துறை அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து  ஏற்பட்டது. சற்றுநேரத்தில் தீயானது அந்த தளம் முழுவதும் மளமளவென பரவியது. 

தகவலறிந்த உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களை கொண்டு, சில நிமிட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP