ஸ்விக்கி, சோமட்டோ நிறுவனங்களுக்கு அரசு நோட்டீஸ்!

ஹிந்துக்களின் புனித தலமான ஹரித்துவாரில், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மாமிச உணவு வகைகளை (Non -Veg) விநியோகம் செய்ததற்கு உரிய விளக்கம் கேட்டு, பிரபல உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி,சோமட்டோ ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 | 

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரம் ஹிந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நகருக்கு உட்பட்ட ஜவலாபூர், ஹர் -கி-புரி, ஹரிபூர், மொட்டிச்சூர் உள்ளிட்ட இடங்களில் மாமிச உணவு வகைகளை விநியோகம் செய்ய ஹரித்துவார் நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி, ஸ்விக்கி, சோமட்டோ ஆகிய நிறுவனங்கள் அங்கு மாமிச உணவு வகைகளை விநியோகம் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஹிந்துக்களின் மதஉணர்வை  புண்படுத்தும் விதமாக செயல்படும் இந்நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் வாசிகள் சிலர் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், உத்தரகண்ட் மாநில அரசு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டனர். அதில் ஸ்விக்கி, சோமட்டோ நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரிய வந்தது. 

அத்துடன்,  ஹரித்துவாரின் பிற பகுதிகளில் மாமிச உணவுகளை விநியோகம் செய்வதற்கும் அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெறாததும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, ஹரித்துவாரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மாமிச உணவு வகைகளை (Non -Veg) விநியோகம் செய்ததற்கு உரிய விளக்கம் கேட்டு ஸ்விக்கி,சோமட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு மாநில சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP