இனிமே சபரிமலைக்கு போவியா? மருமகளை நையப்புடைத்த மாமியார்!

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சபரிமலைக்கு சென்ற கனகா துர்கா என்ற பெண், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கேரள மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து, இரு பெண்களும் தலைமறைவாகினர்.
 | 

இனிமே சபரிமலைக்கு போவியா? மருமகளை நையப்புடைத்த மாமியார்!

பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, சபரிமலைக்கு சென்ற கனகா துர்கா என்ற பெண்ணின் செயலைக் கண்டித்து,  மாமியார் அவரை உருட்டுக்கட்டையால் அடித்ததையடுத்து, தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட வயது பெண்கள் சபரிமலைக்குள் நுழையக்கூடாது என்ற பாரம்பரிய கட்டுப்பாட்டையும், பக்தர்களின் எதிர்ப்பையும் மீறி கனகதுர்கா(39), பிந்து அமினி (40) ஆகிய இரு பெண்கள் இந்த மாத தொடக்கத்தில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர்.

கேரள மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து, இரு பெண்களும் தலைமறைவாகினர். கொச்சின் புறநகர் பகுதியில் அவர்கள் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவார தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு கனக துர்கா இன்று வீடு திரும்பியுள்ளார்.  வீம்பாக சபரிமலைக்குள் நுழைந்த அவரது செயலால் ஆத்திரமடைந்த கனக துர்காவின் மாமியார், அவரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாக தெரிகிறது.
இதில், பலத்த காயமடைந்த கனக துர்கா, மலப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கனக துர்கா அரசு ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

newtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP