ஃபனி புயல்- ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு

ஃபனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 | 

ஃபனி புயல்- ஒடிசாவில் நீட் தேர்வு ஒத்திவைப்பு

ஃபனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதையடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மறு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் ஃபனி புயல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு நாளை நடைபெறும் நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒடிசா தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் நாளை திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும்  என தெரிவித்துள்ளது.

ஃபனி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் ஒடிசாவில் நீட் தேர்வை ஒத்திவைக்க ஒடிசா மாநில தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று ஒடிசா அரசு தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியது. இதையடுத்து நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP