மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்திய நால்வர் கைது

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் மனைவியை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய, 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 | 

மனைவியை நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்திய நால்வர் கைது

கேரள மாநிலத்தில் உள்ள  ஆலப்புழாவில் தங்கள் மனைவியை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய, 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இது குறித்து பெண் ஒருவர் தனது புகாரில்  குறிப்பிட்டிருப்பதாவது: எனது கணவர் டிராவல்ஸ் வைத்துள்ளார். அவர் சமூகவலைதளம் மூலம் கோழிக்கோட்டில் உள்ள ஒருவரிடம் நண்பரானார். பின்னர் அவர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கும், நாங்கள் ஒருமுறை அவர்களது வீட்டிற்கும் சென்று வந்தோம். அதன் பிறகு என்னை அந்த நண்பருடன் செல்லுமாறு வற்புறுத்தினார். அவருடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி வற்புறுத்தினார். இதே போல், அவரது நண்பர்களும் அவர்களின் மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளனர். நண்பருடன் போகவில்லையென்றால் விவாகரத்து செய்துவிடுவேன் என என் கணவர் மிரட்டுகிறார். இவ்வாறு அந்த பெண் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, புகார் அளித்த பெண்ணின் கணவர் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP