அரசியலில் குதித்த முன்னாள் தலைமைச் செயலாளர்!

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், ஆந்திர திரையுலகின் பிரபல நடிகரான பவண் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். அவர், அக்கட்சியின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

ராம மோகன ராவ் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தபோது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவரது சென்னை இல்லத்திலும், தலைமைச்  செயலகத்திலும்  வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, ஓர் அரசு உயரதிகாரியான அவர், வருமான வரிச் சோதனை தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பரபரப்புக்கு பெயர் போன ராம மோகன ராவ் தற்போது, ஆந்திர திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் தம்பியும், பிரபல நடிகருமான பவண் கல்யாணின் ஜன சேனா என்ற கட்சியில் இணைந்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP