புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார்

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
 | 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி.ஜானகிராமன் காலமானார்

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.

திமுகவை சேர்ந்த ஆர்.வி. ஜானகிராமன் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருந்தார். மேலும் இவர், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார். நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
 
ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  மறைந்த ஜானகிராமன் உடலுக்கு புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி  உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், திமுக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP