மேற்கு வங்கத்துக்கு காரிலேயே செல்லும் பாஜக முன்னாள் முதல்வர்!

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானும் மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று காரில் பயணம் மேற்கொள்கிறார்.
 | 

மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி மாவட்டத்துக்குட்பட்ட கராக்பூரில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் பங்கேற்க உள்ளார்.

இதையொட்டி, அங்கு அவர் ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க மேற்கு வங்க மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அவர் கராக்பூருக்கு காரில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதே காரணத்துக்காக நேற்று, உத்தரப்பிரதேச மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் புருலியாவுக்கு காரில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP