பெண் வயிற்றில் 1. 5 கிலோ எடையுடைய உலோகங்கள்!

அறுவை சிகிச்சையின் முடிவில் பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல், மூக்குத்தி, செயின், கைக்கடிகாரம், உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் 90 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
 | 

பெண் வயிற்றில் 1. 5 கிலோ எடையுடைய உலோகங்கள்!

மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் வசித்து வரும், மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சில நாட்களாக மிகுந்த வயிற்று வலியில் துடித்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் பெற்றோர்கள், அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன் படி சமீபத்தில் அந்த பெண்ணுக்கு அறிவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 1.5 கிலோ எடையுடைய ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் இருப்பதை கண்ட மருத்துவர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அறுவை சிகிச்சையின் முடிவில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து வளையல், மூக்குத்தி, செயின், கைக்கடிகாரம், உள்ளிட்ட ஆபரணங்கள் மற்றும் 90 நாணயங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

மனநிலை பிறழ்ந்த நிலையில், தான் என்ன செய்கிறோம் என்று அறியாத அந்தப் பெண், கையில் கிடைத்த உலோகங்களையெல்லாம்  உண்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP