இளைஞனின் உயிரைப் பறித்த ஃபேஸ்புக் மோகம்!

ஒரு இரும்பு பாலத்தை கடக்கும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டில் பலமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 | 

இளைஞனின் உயிரைப் பறித்த ஃபேஸ்புக் மோகம்!

திரிபுரா மாநிலம், ஹரினா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் தாஸ் (25). கொல்கத்தாவில் ஒரு கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறையில் தமது சொந்த கிராமத்துக்கு வந்த ராகுல், கடந்த திங்கள்கிழமை விமானம் மூலம் கொல்கத்தா திரும்ப திட்டமிட்டிருந்தார்.

அதற்கு முன் அன்றைய தினம், ராகுலும், அவனது நண்பர் சுமன் தாஸும் ஜாலியாக பைக்கில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கின் ஆக்சிலேட்டரை ஒரு கையில் திருகியப்படி, மறுகையில் செல்ஃபோனில் தங்களது பைக் பயணத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்தப்படி ராகுல் பைக்கை ஒட்டி சென்றுள்ளார்.

போகும் வழியில் ஒரு இரும்பு பாலத்தை கடக்கும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டில் பலமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது நண்பன் சுமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP