Logo

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்... எங்க தெரியுமா?

மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக, சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளதையடுத்து, அங்கு காங்கிரஸ் கூடாரம் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 | 

ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தமது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகரிடம்  இன்று கொடுத்ததை  தொடர்ந்து, மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸை இன்று சந்தித்துள்ளார். அவருடன், காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏவான அப்துல் சத்தாரும், மகாராஷ்ட்ர மாநில முதல்வரை சந்தித்துள்ளார்.

"மாநில காங்கிரஸ் தலைமையின் மீதான அதிருப்தி காரணமாக தான்,  தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மாநிலத் தலைமை, காங்கிரஸ் கட்சியை இங்கு மொத்தமாக அழித்து வருகிறது. எங்களுடன் இன்னும்  10 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர்" என அப்துல் சத்தார் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மகாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிக் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், மகாராஷ்ட்ரத்தில் காங்கிரஸ் கூடாரம் காலியாக தொடங்கியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP