முதியோர் உதவித்தொகை உயர்வு!

புதுச்சேரியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
 | 

முதியோர் உதவித்தொகை உயர்வு!

புதுச்சேரியில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, " 60 வயதை கடந்த முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்து ரூ.1500 உதவித்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் 80 வயதை கடந்த முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 2 ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார்.

மேலும், முதியோர் உதவித் தொகைக்காக 8,250 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள 8250 பேருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP