அதிவேகமாக பஸ் ஓட்டியதற்கு டிரைவருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை!

அதிவேகமாக பேருந்தை இயக்கியதற்காக இப்படியா செய்வது.. வடமாநிலங்களில் நூதன தண்டனை
 | 

அதிவேகமாக பஸ் ஓட்டியதற்கு டிரைவருக்கு பொதுமக்கள் கொடுத்த தண்டனை!

பேருந்தை அதிவேகமாக இயக்கியதற்காக பேருந்தின் கூரை மீது ஓட்டுநர்களை தோப்புக்கரணம் போடச்செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மோவ், மன்பூர் மற்றும் பிதாம்பூர் வரை பேருந்துகளை இயக்கும் சில ஓட்டுநர்கள் பேருந்துகளை அதிவேகமாக இயக்குவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நகராட்சி தலைவர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அப்போது மிகவேகமாக பேருந்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள் என நகராட்சி அதிகாரி கூறியதாக தெரிகிறது. 

அதன்படி அதிவேகமாக இயக்கிய பேருந்துகளை சிறைப்பிடித்து பேருந்தின் மேற்கூரை மீது ஏற்றி ஓட்டுநர்களை தோப்புக்கரணம் போடச்செய்தனர். பொதுமக்கள் கூடி நிற்க சாலையின் நடுவே நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மீண்டும் பேருந்துகளை அதிவேகமாக இயக்கக்கூடாது என எச்சரித்தும் அனுப்பினர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP