குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை!

காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளார்.
 | 

குமாரசாமிக்கு தேவேகவுடா அறிவுரை!

காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளார். 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், தங்கள் முதல்வர் சித்தராமையா தான் என்று கூறுகிறார்கள்.

மேலும் காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேகவுடா குடும்பம் பற்றி விமர்சனம் செய்தார். 

இதற்கு சற்று கோபமாக பதிலளித்த குமாரசாமி, காங்கிரசார் இதேபோல் தொடர்ந்து பேசினால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசியுள்ளார்.

அப்போது தேவேகவுடா, காங்கிரசாரின் விமர்சனத்திற்கு உடனே கருத்து கூற வேண்டாம். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். அரசியலில் இதுபோன்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்க வேண்டாம். அவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP