டெல்லி: 40 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி

தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் முன்னிலையில் பிரபல ரௌடி ஒருவர் நாற்பது முறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

டெல்லியின் பிரபல ரௌடி வீரேந்தர் மண் (40), அவருடைய உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக நேற்று அவருடை காரில் சென்று கொண்டிருந்தார். அந்தக் கார் டெல்லியன் நரேலா பகுதியை அடைந்தபோது, காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டு விட்டு ஓடி விட்டனர்.

இதில் சுமார் 40 குண்டுகள் அவர் மீது சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வீரேந்தர் மண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட நபர் குறித்த டெல்லி போலீசார் கூறுகையில் வீரேந்தர் மண் மீது கொலை மற்றும் திருட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவருடைய பழைய விரோதிகள் எவரும் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP