Logo

ஆப்பிள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

உன்னாவோவில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட, குல்தீப் சிங் செங்கார், சம்பவ தினத்தன்று இருந்த இடத்தை, வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கண்டுபிடித்துக் கூறுமாறு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஆப்பிளிடம், டெல்லி உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
 | 

ஆப்பிள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

உன்னாவோவில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார், சம்பவ தினத்தன்று இருந்த இடத்தை, வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கண்டுபிடித்துக் கூறுமாறு, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஆப்பிளிடம், டெல்லி உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 

உத்திரபிரதேச மாநிலம், உன்னாவோ நகரில் கடந்த ஜூன் மாதம் 2017 ஆம் ஆண்டு, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்த வழக்கின் நீதிபதியான தர்மேஷ் ஷர்மா, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஆப்பிளிடம், சம்பவ தினத்தன்று குல்தீப் சிங் எங்கிருந்தார் எனக் கண்டுபிடித்து, வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்குள் கூறுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குல்தீப் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய அந்த சிறுமியின் தந்தை போலீஸாரால் கடந்த ஏப்ரல் 3, 2018 அன்று கைது செய்யபட்டு, அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP