டெல்லி; சட்டப்பிரிவு 370 குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் - செப்.25 ல் தொடக்கம்

டெல்லியில் ஜான் ஜாக்ரான் அபியான் என்ற (ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டது குறித்து விளக்கமளிக்கும்) விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாஜக செயல்தலைவர் ஜே.பி நட்டா செப் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
 | 

ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஜான் ஜக்ரான் அபியான் என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செப்.25ஆம் தேதி பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கவுள்ளார். தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறும் இந்த ஜான் ஜக்ரான் அபியான் திட்டத்தின் கீழ் டெல்லியில் 370 இடங்களில் சிறிய அளவிளலான கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. 

இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான விஜேந்திர குப்தா கூறுகையில், "இந்த பிரச்சாரத்தின் கீழ் நாங்கள் டெல்லியின் ஒவ்வொரு மூலையில் உள்ள மக்களையும் சந்தித்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் அபிவிருத்திக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த முடிவு குறித்து அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்போம்" என தெரிவித்துள்ளார். 

டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜக மேற்கொள்ளவுள்ள இந்த ஜான் ஜாக்ரான் அபியான் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் லட்சக்கணக்கான வாக்காளர்களை ஈர்க்க வாய்ப்புள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP