டெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து

யமுனா விரைவு சாலையில் ஜம்மு-காஷ்மீர் பதிவு எண் கொண்ட காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

டெல்லி: ஜம்மு - காஷ்மீர் பதிவு எண் கொண்ட கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து

யமுனா விரைவு சாலையில் ஆம்புலன்ஸ் மற்றும் ஜம்மு -காஷ்மீர் மாநில பதிவெண் கொண்ட கார் ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தலைநகர் டெல்லி மற்றும் லக்னௌ இடையேயான "யமுனா எக்ஸ்பிரஸ்" சாலையில், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலை ஆம்புலன்ஸிஸ் வைத்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் எடுத்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, அம்புலன்ஸ் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. 

இதையடுத்து, அந்த அம்புலன்ஸ் எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் எக்ஸ்பிரஸ்வே அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, ஆம்புலஸ் மோதி விபத்துக்குள்ளான கார் ஜம்மு-காஷ்மீர் மாநில பதிவு எண்ணைக் கொண்டிருந்தது.  மேலும் காரில் பயணம் செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் விபத்திற்குப் பிறகு அவர்களது நிலை ஆகியன குறித்த எவ்வித தகவல்களையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP