டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு

டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று காற்று மாசு அளவு அபாய அளவைக் கடந்துள்ளது. புகையில் இருந்து காத்துக்கொள்ள பலர் முகமூடி அணிந்து சென்றனர். விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர்.
 | 

டெல்லி: அபாய அளவை தாண்டிய காற்று மாசு

டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பிறகு இன்று காற்று மாசு அளவு அபாய அளவைக் கடந்துள்ளது.

டெல்லியில் காற்றில் மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன், காற்று மாசு அளவு மிக மோசமான நிலைக்கு சென்றது. காற்றின் தரக்குறியீடு 345 என்ற அளவிற்கு மிக மோசமாக மாசு அதிகரித்தது. 

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லி ஆனந்த் விஹாரில் 999, அமெரிக்க தூதரக பகுதி மற்றும் சாணக்யபுரி பகுதியில் 459, மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு மைதானத்தில் 999 என அபாயகரமான அளவில் காற்றின் தன்மை இருந்தது.

டெல்லியில் இன்று காலையில் சாலைகள் தெரியாத அளவிற்கு புகைமூட்டம் அடர்ந்து காணப்பட்டதால் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்கினர். புகையில் இருந்து காத்துக்கொள்ள பலர் முகமூடி அணிந்து சென்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP