டெல்லி: பணத்திற்காக குழந்தைகளை விற்ற தாய்..

டெல்லியில் ஒரு தாய் பணத்திற்காக தனது குழந்தைகளை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

டெல்லி: பணத்திற்காக குழந்தைகளை விற்ற தாய்..

டெல்லியில் ஒரு தாய் பணத்திற்காக தனது குழந்தைகளை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி பவானா பகுதிதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அவரது தாயார் பதர்பூரில் உள்ள சகோதரிக்கு வீட்டிற்கு செல்வோம் என வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். ஆனால் சகோதரி வீட்டிற்கு செல்வதற்கு பதில் நிஜாமுதீனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். 

ஹோட்டலில் சிலருடன் பேசி கொண்டிருந்த தாய், மகளிடம் நான் வேறு ஒரு இடத்திற்கு செல்லவேண்டும். உன்னை ஷாஹித் என்ற நபர் வீட்டிற்கு அழைத்து செல்வார் என கூறி அவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த நபர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அழைத்து செல்லாமல் பவானா கிராமத்தில், ஈஸ்வர் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

அந்த வீட்டில் இருந்த மற்ற பெண்கள் அந்த சிறுமியிடம் திருமண ஆடையை அணிந்து தயாராகும் படி கூறியுள்ளனர். எதற்காக என கேட்டபோது, ரூ.1 லட்சத்திற்கு உன்னை விற்றுவிட்டதாகவும் இனி நாங்கள் சொல்வதை தான் கேட்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர். 
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி செய்வதறியாது இருந்தபோது, அங்கு சென்ற ஒரே நாளிலே அவர் தப்பி செல்ல வழி கிடைத்துள்ளது. 
அங்கிருந்த தப்பிய சிறுமி தனது பகுதிக்கு சென்று அண்டை வீட்டாரிடம் உதவி கேட்டு, 181 என்ற மகளிர் ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டெல்லி மகளிர் ஆணையம், சிறுமியை மீட்டு உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது, சிறுமி தனது தாய், மாற்றாந்தகப்பன் மற்றும் 4 உடன் பிறப்புகளுடன் வசித்து வந்ததாகவும், கடந்த மாதம் தனது தயார் ஒரு வயதுடைய தனது சகோதரனை ஒரு கடத்தல்காரருக்கு விற்றுவிட்டதாகவும், தற்போது தன்னை விற்றிருப்பதாகவும் கூறினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP