ஜம்மு -காஷ்மீரில் விடிய, விடிய துப்பாக்கிச் சண்டை!

இந்தியாவுடன் அமைதியே விரும்புவதாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அந்நாட்டு ராணுவம் இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
 | 

ஜம்மு -காஷ்மீரில் விடிய, விடிய துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே விடிய, விடிய துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்தியாவுடன் அமைதியே விரும்புவதாக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அந்நாட்டு ராணுவம் இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்றும் அதிகாலை 3 மணியளவில், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட அக்னூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்தது.

இருதரப்பும் இடையே 3 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச் சண்டை காலை 6:30 மணியளவில் முடிவுக்கு வந்தது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP