தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏகள் கட்சி தாவ திட்டம்?

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்எல்ஏகள் கட்சி தாவ திட்டம்?

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மக்களவை தேர்தலின்போது தென் மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றவில்லை.

17 மக்களவை தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் அக்கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தெலுங்கானாவில் பாஜக ஆதரவு அலை வீசியதால் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 

119 உறுப்பினர்களை கொண்ட தெலுங்கானா சட்டசபையில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு மொத்தம் 88 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். 

இவர்களில் 12 பேர் டி.ஆர்.எஸ். கட்சிக்கு செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எண்ணிக்கை மொத்த எம்எல்ஏக்களில் 3-ல் 2 பங்கு ஆகும். இதனால் அவர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட மாட்டார்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP