ஆந்திராவிலும் தனித்துவிடப்படும் காங்கிரஸ்!

வரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.வரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
 | 

ஆந்திராவிலும் தனித்துவிடப்படும் காங்கிரஸ்!

வரும் மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் -தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, வரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தெலுங்கு தேசம் விரும்பவில்லை எனத் தெரிகிறது.இதன் காரணமாக, அந்த மாநிலத்திலும் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 175 இடங்கள், 25  மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அந்த மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

தங்களது இந்த முடிவு குறித்து கட்சியின் மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்படும். இருப்பினும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP