காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி- வேட்பாளர்களை அறிவித்தார் பரூக் அப்துல்லா

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆறு தொகுதிக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
 | 

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் ஆறு மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் ஏப்ரல்11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தன. 

இதற்காக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதையடுத்து அதிருப்தி அடைந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளிலும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP