எரியும் தீயின் நடுவே காஸ் சிலிண்டர்களை அகற்றிய காவலருக்கு பாராட்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீப்பிடித்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த உதவி ஆய்வாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாது வீட்டிற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர்களை வெளியே கொண்டு வந்து அப்புறப்படுத்தினார்.
 | 

எரியும் தீயின் நடுவே காஸ் சிலிண்டர்களை அகற்றிய காவலருக்கு பாராட்டு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீப்பிடித்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த உதவி ஆய்வாளர் தனது உயிரையும் பொருட்படுத்தாது வீட்டிற்குள் இருந்த எரிவாயு சிலிண்டர்களை வெளியே கொண்டு வந்து அப்புறப்படுத்தினார். இதையடுத்து சமுக வலைதளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவின் அலம்கானி பகுதியில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை உதவி ஆய்வாளர் அகிலேஷ் குமார் தீக்‌ஷித், தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் உடனடியாக ஒரு போர்வையை போர்த்தி கொண்டு எரியும் வீட்டிற்குள் சென்றார்.

பின்னர் அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களை கையில் தூக்கி கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார். இதனால் அங்கு நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் உதவி ஆய்வாளர் அகிலேஷ் குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP