சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்: நெட்டிசன்களிடம்  வாங்கிக்கட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ

புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு இரங்கல் தெரிவித்து மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. ராம் கதம் சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
 | 

சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்: நெட்டிசன்களிடம்  வாங்கிக்கட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ

உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. ராம் கதம் சர்ச்சையை ஏற்படுத்தி பின்னர் தனது கருத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். 

மும்பையைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராம் கதம். இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக நியூயார்க்கில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவிப்பதாக ராம் கதம் பதிவிட்ட  பதிவால் நெட்டிசன்கள் கடுமையாக கோபமடைந்தனர். உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் செய்தி வெளியிட்டதன் மூலம் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். ஆதாரமற்ற தகவல்களை வைத்து இரங்கல் செய்தி வெளியிட்ட அவரை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்தனர். சிலர் கடுமையாக கண்டனமும் தெரிவித்தனர்.

பின்னர் உடனடியாக அவரே தனது பதிவை திரும்பப்பெற்றுக்கொண்டார். மேலும் ''நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் நல்ல உடல்நிலைக்காகவும், வேகமாக குணமடையவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என மற்றொரு பதிவை வெளியிட்டு தனது முந்தைய பதிவை நீக்கினார். 

முன்னதாக பா.ஜ.க மும்பை எம்.எல்.ஏ. ராம் கதம், அங்கு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்றபோது, உறியடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் பெண்களை கடத்தி வந்து ஒப்படைப்பதாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதற்காக அவர் பல தரப்பினரால் கண்டிக்கப்பட்டார். 

Newstm.in 

தொடர்புடையவை: 

பா.ஜ.க எம்.எல்.ஏ ராம் கதமின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 5 லட்சம்: காங்கிரஸ் மூத்த தலைவர் அறிவிப்பு!

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP