ஜம்மு காஷ்மீரில் சிறார்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை, பாதுக

ஜம்மு காஷ்மீரில் 144 சிறார்கள் சட்டவிரோத கைது செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, விசாரணை மேற் கொண்ட சிறார்களுக்கான நீதிக் குழு, அவர்கள் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காகவே கைது செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
 | 

ஜம்மு காஷ்மீரில் சிறார்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை, பாதுகாப்பிற்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறார்களுக்கான நீதிக் குழு

ஜம்மு காஷ்மீரில் 144 சிறார்கள் சட்டவிரோத கைது செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, உச்ச  நீதிமன்ற உத்தரவின் படி, விசாரணை மேற் கொண்ட சிறார்களுக்கான நீதிக் குழு, அவர்கள் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காகவே கைது செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறப்பட்டதை தொடர்ந்து அதை 2 யூனியன் பிரதேங்களாக பிரிக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிருப்தியான சூழல் இருந்து வருகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களின் பாதுகாப்பிற்காக அரசு 144 சிறார்கள் உட்பட பல பேரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் கைது செய்தது. 

இந்நிலையில், குழந்தை உரிமை ஆர்வலர்களான எனாக்ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா இருவரும், கைது செய்யப்பட்ட 144 சிறார்களும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் சட்டவிரோதமாக தான் கைது செய்யப்பட்டார்களா எனவும் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் விசாரணை மேற் கொண்டு தகவலளிக்குமாறு இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நால்வர் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு சிறார்களுக்கான நீதிக் குழுவிற்கு உத்தரவு பிறப்பித்தது. 

இது குறித்து விசாரணை மேற் கொண்ட நீதிக் குழு, 144 சிறார்களும் பாதுகாப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை எனவும், அதில் 142 சிறார்கள் கைது செய்யப்பட்ட அன்றே விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், இருவர் போலீசாரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், சட்டவிரோதமாக அவர்கள் கைது செய்யப்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை எனவும், சில ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP