முதல்வரா? குமாஸ்தாவா? - குமுறும் குமாரசாமி!

ஆட்சி நிர்வாகத்தில் காங்கிரஸின் வரம்பு மீறிய தலையீடுகளால், தான் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும், ஒரு குமாஸ்தாவாகவே தம்மை உணருவதாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி குமுறியுள்ளார்.
 | 

மதசார்பற்ற  ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், "தங்களின் ஏவல் பணிகளை செய்துமுடிக்கும் குமாஸ்தாவாக காங்கிரஸார் தம்மை கருதுகின்றனர். ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் வரம்பு மீறிய தலையீட்டால் தான் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளேன்" என குமாரசாமி பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது, "தான் கர்நாடக மாநில முதல்வராக இருந்தும் சந்தோஷமாக இல்லையென்றும், சிவப்பெருமான் எப்படி நஞ்சை தொண்டைக்குழிக்குள் வைத்து கொண்டு, இந்த உலகை காக்கிறாரோ, அதுபோன்றே மக்களுக்காக பணியாற்றுகிறேன்" எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மீண்டும் காங்கிரஸ் மீதான தமது  அதிருப்தியை வெளிப்படுத்தும் விதத்தில் குமாரசாமி பேசியுள்ளதால், வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, கர்நாடகத்தில் காங்கிரஸ் -மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP