சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கான முதல் முகாம் அமைக்கிறது மத்திய அரசு!

வங்கதேசத்திலிருந்து நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிவதற்கான தேசிய குடிமைப் பட்டியலை, மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதனடிப்படையில், அத்தகையவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்களை, தனியாக தங்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென தனியாக முகாம்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 | 

சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கான முதல் முகாம் அமைக்கிறது மத்திய அரசு!

வங்கதேசத்திலிருந்து நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிவதற்கான தேசிய குடிமைப் பட்டியலை, மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதனடிப்படையில், அத்தகையவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
அதற்கு முன், அவ்வாறு சட்ட விரோதமாக குடியேறியவர்களை, தனியாக தங்க வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென தனியாக முகாம்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அசாமின் தேசிய குடிமைப் பட்டியலில், சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை, 31 சிறைகளில் வைத்துள்ள நிலையில், அவர்களுக்கென்று பிரத்யேக முகாம் அமைக்க அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டன. இந்த பணிகள் கடும் மழையினால் கால தாமதம் ஆனதாகவும், இந்த ஆண்டுக்குள்  நிறைவடையும் எனவும் மத்திய அரசு குறிப்பட்டுள்ளது. 

இம்முகாமின் கட்டுமான வேலைகள், 46 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. 
4 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்த 15  கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

இதில் ஓர் அறைக்கு 4,5 என்ற வீதம் சுமார், 3000 மக்கள் வசிக்கலாம். இந்த முகாமில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட உள்ள நிலையில், அவை பாதுகாப்பு நோக்கத்திற்காகவே என அரசு குறிப்பிட்டுள்ளது. 

அசாம் மாநில அமைச்சர் ஜி. கிஷான் ரெட்டி பாராளுமன்றத்தில் பேசுகையில், "இதனை சிறை என குறிப்பிட முடியாது. மருத்துவமனை, கலையரங்கம், பள்ளி, விளையாட்டுத் திடல் என அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்தும் முகாமில் இருக்கும். பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு மருத்துவ மற்றும் இதர தேவைகளும் பூர்த்தியாகும் படி முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. 
அங்கே வசிக்க போகும் மாணவர்களுக்கு கண்டிப்பாக கல்வி அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தேசிய குடிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டிருக்கும் மக்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிக்க, 60 முதல் 120 நாட்களுக்குள் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்த பின்னர், நீதிமன்றத்தை அணுகலாம். அப்படி நிரூபிக்க இயலாத பட்சத்தில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட்டு முகாமில் குடியமர்த்தப்படுவர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP