சபரிமலை கோயிலுக்கு செல்வதை தடுக்க முடியாது: திருப்தி தேசாய்

சபரிமலைக்கு செல்வதை கேரள அரசோ, காவல்துறையோ தடுக்க முடியாது என பெண்கள் உரிமை சமூக செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் கூறியுள்ளார்.
 | 

சபரிமலை கோயிலுக்கு செல்வதை தடுக்க முடியாது: திருப்தி தேசாய்

சபரிமலைக்கு செல்வதை கேரள அரசோ, காவல்துறையோ தடுக்க முடியாது என பெண்கள் உரிமை சமூக செயல்பாட்டாளர் திருப்தி தேசாய் கூறியுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்காக சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், பிந்து உள்பட7 பேர் கொண்ட குழு கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருப்தி தேசாய், அரசியலமைப்பு தினமான இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வேன் என்றும், சபரிமலை செல்வதை கேரள அரசோ, காவல்துறையோ தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்காவிட்டாலும் கோயிலுக்கு செல்வதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP