ஆந்திராவில் லுலு குழுமத்திற்கு வழங்கப்பட்டிருந்த நில ஒதுக்கீடு ரத்து - அதிருப்தியில் லுலு நிறுவனம்!!!

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகபட்டினத்தில், முந்தைய தெலுங்கு தேச கட்சியால் லுலு குழுமத்திற்கு வழங்கப்பட்டிருந்த நில ஒதுக்கிட்டை ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ரத்து செய்திருப்பதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் இனி எந்த விதமான திட்டத்திலும் முதலீடு செய்யப்போலதில்லை என்று கூறியுள்ளது லுலு நிறுவனம்.
 | 

ஆந்திர மாநிலத்தில், முந்தைய தெலுங்கு தேச ஆட்சியின் போது, ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த லுலு நிறுவனம் சர்வதேச மாநாட்டு மையத்தின் கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. இதை தொடர்ந்து, கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான நில ஒதுக்கீட்டை கடந்த அக்டோபர் 30ஆம் தேதியன்று ரத்து செய்துள்ளது தற்போதைய ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி.

இதை தொடர்ந்து, முந்தைய ஆட்சியுடன் வெளிப்படையான முறையில் தான் இந்த ஒப்பந்தம் கைது செய்யப்பட்டதாகவும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆலோசகர்களை நியமித்தல், உலகத்தரம் வாய்ந்த கட்டடக் கலைஞர்கள் கொண்டு திட்டம் வடிவமைத்தல் போன்ற ஆரம்பக்கட்ட திட்ட மேம்பாட்டு செலவுகளுக்காக பெரும் தொகையை செலவு செய்துள்ளதாகவும் கூறிய லுலு நிறுவன தலைவர் ஆனந்த் ராம், தற்போதைய மாநில அரசின் இந்த முடிவிற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கும் நிலையிலும், இனி அம்மாநிலத்தில் எந்த விதமான முதலீட்டில் இறங்கவு்ம் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், ஜகன்மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அரசின் இந்த முடிவு அதிருப்தியளிக்கும் வகையில் இருப்பதை சுட்டிச்காட்டியுள்ளார் ஆனந்த் ராம்.

ஐக்கிய அரபு நாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லுலு நிறுவனம், ஆந்திர பிரதேச மாநில விசாகபட்டினத்தில் சுமார் 2,200 கோடி ரூபாய் செலவிலான சர்வதேச மாநாட்டு மையத்திற்கான கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்ததாகவும், அதோடு நிற்காமல், ஐந்து நட்சத்திர ஹோட்டல், பேரங்காடி என அனைத்தையும் கூட்டினால் சுமார் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மாநில அரசு அதை ரத்து செய்துவிட்டது என்று கூறியுள்ளனர் லுலு நிறுவனர்கள்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP