மும்பை கட்டட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

மும்பை டோன்கிரி பகுதியில் 4 மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
 | 

மும்பை கட்டட விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

மும்பை டோன்கிரி பகுதியில் 4 மாடி கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள டோன்கிரி பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 மாடி குடியிருப்பு கட்டடம் நேற்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் 15 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், சுமார் 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் போலீசார்,  தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9பேர் படுகாயமடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP