நக்சல் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பலி: சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் இன்று நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்தார்.
 | 

நக்சல் தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பலி: சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடாவில் நக்சல்கள் இன்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்தார்.

தண்டேவாடா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான பீமா மாண்டவி இன்று தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியிலேயே அவரது கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் மீது நக்சல்கள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில்,  எம்எல்ஏ பீமா மாண்டவி, அவரது பாதுகாப்பு அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர். சத்தீஸ்கரில் நாளை மறுநாள், மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நிகழ்த்தப்பட்டுள்ள இத்தாக்குதல் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது முதல்வர் பூபேஷ் பெஹால் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவியின் இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கலும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP