28வயது மாணவர் தலைவருக்கு வாய்ப்பளித்த பாஜக!

பெங்களூரு தெற்கு தொகுதிக்கு தேஜஸ்வி சூர்யா என்ற 28 இளைஞருக்கு, மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.
 | 

28வயது மாணவர் தலைவருக்கு வாய்ப்பளித்த பாஜக!

பெங்களூரு தெற்கு தொகுதிக்கு தேஜஸ்வி சூர்யா என்ற 28 இளைஞருக்கு, மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை எம்.பியாக இருந்தவர் எஸ். அனந்தகுமார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் கட்சியில் உள்ளதுபோல் இறந்த வேட்பாளரின் வாரிசை அந்த தொகுதியில் போட்டியிட வைப்பதுபோல அனந்தகுமாரின் மனைவியை பாரதிய ஜனதா போட்டியிட வைக்கும் என்று பெங்களூரிவில் பலர் எதிர்பார்த்திருந்தனர்.

28வயது மாணவர் தலைவருக்கு வாய்ப்பளித்த பாஜக!

இந்நிலையில் அந்த  தொகுதியில் போட்டியிட வாரிசு அடிப்படையில் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினிக்கு பாரதிய ஜனதா வாய்ப்பளிக்கவில்லை. அதையடுத்து அவர் கட்சித் தலைமையை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தாலும், அன்றைய மாலைக்குள்ளாகவே, வாரிசு அரசியல் என்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பதை ஏற்பதாகவும், கட்சியின் தலைமை அறிவித்துள்ளதை ஏற்பதாகவும் அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி அறிவித்தார்.

அதையடுத்து ஆர்எஸ்எஸ் பரிவார் அமைப்புகளில் ஒன்றான ஏபிவிபி எனப்படு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பல காலம் பணியாற்றி வந்த மாணவர் தலைவரான தேஜஸ்வி சூர்யாவிற்கு பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி வழங்கியது.

அவர்  வழக்குரைஞராக பணியாற்றிக்கொண்டே, பாஜகவின் இளைஞர் அணி தலைவராகவும் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக இம்முடிவை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

28வயது மாணவர் தலைவருக்கு வாய்ப்பளித்த பாஜக!

இதே போல் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் 29 வயதான செல்ஜா குமாரிக்கு 1991ம் ஆண்டு நடை‌பெற்ற மக்களவை தேர்தலில் ஹரியானா மாநிலம் சிர்சாவில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 

வெற்றி பெற்ற செல்ஜா குமாரிக்கு மத்திய கல்வி மற்றும் கலாச்சார துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதையடுத்து 2004ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் தலைமையிலான  ஆட்சியிலும் செல்ஜா குமாரிக்கு அவருக்கு வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அம்பாலா தொகுதியில் இருந்து தேர்‌ந்தெடுக்கப்பட்ட செல்ஜா குமாரிக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP