கேரளாவில் 14 தொகுதிகளில் பாஜக போட்டி

கேரளாவில் 14 இடங்களில் பா.ஜ.கவும், எஞ்சிய 6 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் போட்டியிட முடிவு செய்துள்ளன. என்று பா.ஜ.க தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார்.
 | 

கேரளாவில் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஓட்டு பதிவு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இதன்படி மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் பா.ஜ.க 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

கூட்டணி கட்சிகளான பாரத் தர்மா ஜனா சேனா 5 இடங்களிலும், பிசி தாமஸ் தலைமையிலான் கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. என்றார். மேலும் மிசோரம் மாநில ஆளுநராக பதவி வகித்த கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு எதிராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP